விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் 1490 திரையரங்குகளில் வெளியாகிறது
Share
இயக்குனர் சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளது.
இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் படப்பிடிப்புகள் முடியாத நிலையில் இருந்து வந்தது. தற்போது, படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தின் 560 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 750 தியேட்டர்களிலும், கர்னாடகாவில் 180 தியேட்டர்களிலும் வெளியாகவுள்ளது.













