LOADING

Type to search

சினிமா

மார்ச் 25 ல் வெளியிடப் போவது “ஆர் ஆர் ஆர்” படமா அல்லது “டான்” படமா என்ற குழப்பத்திலிருக்கும் லைக்கா பட நிறுவனம்

Share

ரஜினிகாந்தை வைத்து 2.O, தர்பார் ஆகிய படங்களையும் விஜய்யை வைத்து கத்தி படத்தையும் தயாரித்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமாக தமிழில் இயங்கி வரும் நிறுவனம் லைக்கா இப்படம் பல்வேறு தமிழ் திரைப்படங்களை தயாரித்து உள்ளது. மேலும், படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டான்” திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி திரைக்கு வரும் என ஒரு நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது, இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘RRR’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டது.

டான் படம் வெளியாகும் அதே மார்ச் 25 வெளியாகிறது என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை வாங்கி தமிழகத்தில் வெளியிடுவது லைக்கா நிறுவனம் தான். ஒரே நாளில் தான் தயாரித்த படமும் தான் வினியோகம் செய்யும் படமும் வெளியாவதால் தற்போது சிக்கலில் உள்ளது லைக்கா நிறுவனம். எப்படியும் ஏதேனும் ஒரு படம் வசூல் பாதிக்கப்படும், ஆதலால் ஏதேனும் ஒரு படத்தை படத்தின் வெளியீடு தேதியை மாற்றி விடலாமா என லைக்கா நிறுவனம் சிந்தித்து வருகிறதாம்.

ஒருவேளை டான் படத்தின் வெளியீடு தேதி வேண்டுமானால் தள்ளிப் போகலாம். இல்லை என்றால் RRR திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளை தவிர்த்து மற்ற திரையரங்குகளில் டான் படத்தை திரையிட்டு லாபம் பார்க்கலாம். சரி என்ன நடக்கப்போகிறது என்பதை இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.