LOADING

Type to search

இலங்கை அரசியல்

அதிகாரங்களைத் தன்வசம் கொண்டு துஷ்பிரயோகங்களை மேற்கொண்டிருந்த. வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரான இளங்கோவன் இடமாற்றம்

Share

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு இளங்கோவன் கடந்த பல வருடங்களாக கடமையாற்றியிருந்தார். இவரின் மாற்றத்தினால் புதிய நிர்வாக கட்டமைப்பின் கீழ் இனிவரும் காலங்களில் ஆசிரியருக்கு ஒரு விடிவு காலமாக அமையும். இவருடைய நிர்வாகத்தின் கீழ் ஆசிரியர்கள் இடமாற்ற கொள்கைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இருக்க வேண்டிய அதிகாரங்களைத் தன்வசம் வைத்துக் கொண்டு இவர் அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் இடமாற்றம் வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கு ஒரு விடிவுகாலம். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ரீதியான உபசெயலாளர் புயல்.செ. ஸ்ரீ கந்த நேசன்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் இடமாற்றம் வரவேற்கத்தக்கது. பல வருடங்களாக அவர் கல்வி அமைச்சின் செயலாளராக கடமை புரிந்தும் வடமாகாண கல்வியில் எந்தவித முன்னேற்றமும் இடம்பெறவில்லை. அதிகாரங்களைத் தனதாக்கி வைத்துக்கொண்டு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அதிகாரங்களை வழங்காது தன்னிச்சையாக செயற்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்தார் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ரீதியிலான உப செயலாளரும் வடமாகாண செயலாளருமான புயல் நேசன். அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யுமாறு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இலங்கை வரலாற்றில் பாரியளவு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் போராட்டத்தை நசுக்கும் வகையில் செயலாளர் இளங்கோவன் அவர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்றைய தினம் சம்பளம் இல்லாத விடுமுறையாக அறிவித்து கடிதம் வெளியிட்டிருந்தார். உடனடியாக நாங்கள் இது தொடர்பில் எமது சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்க அவர்களுடன் தொடர்பு கொண்டு நீதிமன்றத்தை நாடியதன் விளைவாக சம்பளம் அற்ற விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

அத்துடன் மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுதந்திரமாக செயல்பட விடாமல் தன்னுடைய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார். அந்த வகையில் இவருடைய செயற்பாட்டுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டங்களை மேற்கொள்ள நாங்க தீர்மானித்திருந்த பொழுது இவ்வாறான இடமாற்றம் வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கல்வியில் இனி வருங்காலங்களில் அவருக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு சுயாதீனமாக செயற்பட கூடிய நிலைமை உருவாகும் என நாங்கள் நம்புகின்றோம். அத்துடன் கல்வியமைச்சின் உபசெயலாளர் அஞ்சலி சாந்தசீலன் அவர்களின் இடமாற்றமும் வரவேற்கத்தக்க ஒன்று. இவரும் செயலாளருடன் செயற்பட்டுக் கொண்டு ஆசிரியர்கள் அநீதியினை ஏற்படுத்தி வந்துள்ளார். இவரின் செயற்பாடுகளும் ஒரு பக்க சார்பான செயல்பாடுகளாக அமைந்துள்ளன. புளியங்குளத்தில் ஒரு ஆசிரியருக்கு அநீதி இழைக்கப்பட்ட பொழுது உடனடியாக செயல்பட வேண்டிய இடத்தில், உபசெயலாளர் தன்னிச்சையாக செயல்பட்டு அந்த ஆசிரியருக்கு அநீதியினை இழைத்துள்ளார்.