LOADING

Type to search

சினிமா

அரசு வேலையை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்து அசிங்கப்பட்ட துணை நடிகர் ஜெயமணி

Share

கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்கள் கோலிவுட்டில் வெற்றி கண்ட நகைசுவை நடிகர்களாக வலம் வர முக்கிய காரணம் நகைச்சுவை காட்சிகளில் அவர்களுடன் இணைந்து நடித்த துணை காமெடி நடிகர்கள் தான். ஆனால் இவர்கள் அளவிற்கு துணை நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவதில்லை. இன்றும் பல காமெடி துணை நடிகர்கள் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வருகிறார்கள். மேலும் பலர் வறுமையில் வாடி வருகிறார்கள். அந்த வரிசையில் அரசு வேலையை விட்டு விட்டு சினிமாவிற்கு நடிக்க வந்தவர் தான் துணை நடிகர் ஜெயமணி. இவர் பார்ப்பதற்கு அப்படியே காமெடி நடிகர் செந்தில் போலவே இருப்பார்.

அரசு பணியில் இருந்து பொழுதுபோக்காக சினிமாவில் நுழைந்த ஜெயமணி இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான் ஆனால் இந்த படங்களில் நடிக்க அவர் பல அவமானங்களை கடந்து வந்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயமணி அவரின் கடந்தகால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “சினிமாவில் நுழைய விதி வேண்டும் என்று கூறுவார்கள். நான் பிஎஸ்சி படிப்பை மதுரை தியாகராஜா கல்லூரியில் முடித்தேன். அதன்பின் தமிழக அரசு பணி செய்து வந்தேன். அந்த சமயத்தில் எனது உறவினர்கள் மதுரையில் நாடக தொழில் செய்து வந்தார்கள். எனக்கு சிறுவயதில் நடிப்பில் ஆர்வமில்லை. ஆனால் நாடகத்தை ரசித்து பார்ப்பேன். அப்போது எனது நண்பர் ஒருவர் நான் பார்க்க செந்தில் போல இருப்பதாக கூறி படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்தார். ஆரம்ப காலத்தில் நான் நடிக்க வந்தபோது படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடலாம் என அமர்ந்தால் என் தட்டை பிடுங்கி என்னை அவமானப்படுத்துவார்கள். அரசு பணி செய்த எனக்கு இது தேவையா என பலமுறை நான் நொந்திருக்கிறேன்” என்று மிகவும் மனம் வருந்தி பேசியுள்ளார்.