“எதற்கும் துணிந்தவன்” படத்தின் முன்னோட்டக் காட்சி மார்ச் 2ல் வெளியீடு
Share
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் சிறிதளவு முன்னோட்டக் காட்சி வெளிவந்திருந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீத்தனர். இதனை தொடர்ந்து தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் முழுதளவு முன்னோட்டக் காட்சி வரும் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சன் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது.













