LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ பிரதியைப் சென்னை மதுரா ட்ரவல்ஸ் விகேடி. பாலனிடம் வழங்கிய கனடா வீணைமைந்தன்

Share

கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ் பிரதிகள் தற்போத உலகெங்கும் உள்ள கலை இலக்கிய ஆர்வலர்களின் கரங்களில் உதயன் எழுத்தாளர்களால் கையளிக்கப்படுகின்றன. இந்த வகையில் மேற்படி இதழின் பிரதி ஒன்றை தற்போது சென்னையில் தங்கியுள்ள கனடா எழுத்தாளர் வீணைமைந்தன் அவர்கள் சென்னை மதுரா ட்ரவல்ஸ் பிரயாண முகவர் நிறுவன அதிபர் திரு விகேடி. பாலன் அவர்களிடம் வழங்கினார்.

சென்னையில் பல பிரசுர நிறுவனங்களின் அதிபர்கள்  எழுத்தாளர்கள் மற்றும் கனடா உதயன் நிறுவனத்தின் சென்னைப் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து வரும் எழுத்தாளர் வீணைமைந்தன் அவர்கள் அவர் கனடா உதயன் பத்திரிகையில் தொடர்பாக எழுதிய கட்டுரைகளைத் தொகுக்கும் பணிகளிலும் அங்கு ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது