முதலாம் ஆண்டு நினைவஞ்சலி | திரு. தனபாலசிங்கம் நவரட்ணம் (தனா)
Share
யாழ்ப்பாணம், நல்லுாரைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்டிருந்த எங்கள் அன்பிற்குரிய அமரர் திரு. தனாபலசிங்கம் நவரட்ணம் (தனா) அவர்களின்
ஓராண்டு நினைவஞ்சலி.
புன்னகையே உங்கள் வதனத்தின் அழகுக் கவசம்
புரிந்துணர்வே தங்கள் இதயத்தின் உச்சம்
மென்மையாய் சிந்தித்து மெதுவாகப் பேசி
மற்றவரை மெச்சும் பண்பு உங்களது சித்தம்
என்றும் எமக்கு அன்பை அள்ளி சொரிந்த துணைவராய்
ஏற்றதொரு அப்பாவாய் எழுபதை எட்டி நின்ற வேளையிலே
நின் உயிரைக் கவர்ந்தான் அந்த கொடியோன் இயமன் எம்
நிம்மதி தொலைந்தது நினைவுகள் அழிந்தன நாசம் தான்
இதயத்தில் நிறைத்து நின்ற இனியவரே நீங்கள் இல்லா
இவ்வுலகம் எமக்குக் கசந்துத எஞ்சிய நாட்கள் எப்படியோ
உதயத்துச் சூரியனாய் எம் குடும்பத்திற்கு ஒளியூட்டியவரே
உம் உடை இருந்ததனால கண்ணை பறிகொடுத்தவரானோம்
சிதறியது எங்கள் சீரான வாழ்வு சிரித்து மகிழ முடியவில்லை
சீக்கிரமாய் மீண்டு வந்து எம்மோடு சேர்ந்திடுங்கள்
பதறும் எம் மனங்களிலே பாசத்தை கொட்டுங்கள்
பரமனிடம் நாமெல்லாம் அதைத் தான் வேண்டுகின்றோம்
இங்ஙனம்,
அன்பு மனைவி. ஆசைப் புதல்வர் மற்றும் புதல்வி
(647) 515-9923 அல்ல து (647) 467-0027