LOADING

Type to search

இலங்கை அரசியல்

சூர்யா, கார்த்தி வழங்கிய நிதி.. பாராட்டும் பிரபலங்கள் Byமாலை மலர்15 ஆகஸ்ட் 2022 12:45 PM (Updated: 15 ஆகஸ்ட் 2022 12:45 PM) தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் வசந்த் உள்ளிட்டோர் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டு தெரிவித்து நினைவு சின்னம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பின்னர் நடிகர் சங்க கட்டிட நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நாசரிடம் வழங்கினார்கள்.

Share

(15-08-2022)

இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 129 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 668,141ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.