LOADING

Type to search

இலங்கை அரசியல்

புதுக்குடியிருப்பில் மக்களுக்கு மண்ணெண்ணைய் வழங்கிவைப்பு!

Share

ஜெகதீஸ்வரன் டிஷாந்த்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணையினை வழங்கிவைத்துள்ளார்கள்.

கடற்தொழிலாளர்களுக்கு என வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணையினை மக்களுக்கு வழங்கிவைத்துள்ளார்கள்.

நீண்டகாலமாக மண்ணெண்ணைய் இல்லாத நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள கடலடி காரணமாக கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லமுடியாத நிலையில் அவர்களுக்கு என வந்த மண்ணெண்ணையினையிலே மக்களுக்கு தலா 500 ரூபாவிற்கு வழங்கிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம்வட்டாரம்.கைவேலி.தேவிபுரம்.வள்ளிபுனம்ஆகிய பிரதேசமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.