LOADING

Type to search

சினிமா

விஜய் – லோகேஷின் ‘லியோ’ – ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அனிருத்

Share

 

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகத்தில் ஃபகத் பாசிலை காஷ்மீரில் சந்தித்தாக ஜோஸ் பேசும் வசனங்களைப் பகிர்ந்து அந்த இடத்திலிருந்து லியோ படம் துவங்கும் என்று ரசிகர்கள் கணித்துவருகின்றனர். இதற்கெல்லாம் இல்லையா சார் ஒரு எண்டு எனும் அளவுக்கு ரசிகர்களின் பதிவுகள் அமைந்துள்ளன.

இயக்குநர் லோகேஷின் முந்தையப் படங்களான மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பெரும் பங்கு வகித்தது. அந்த அளவுக்கு பாடல்கள் மூலமாகவும் பின்னணி இசையின் மூலமாகவும் படத்துக்கு வலு சேர்த்திருந்தார்.

அந்த வகையில் லியோ பட ப்ரமோ வீடியோவில் அனிருத்தின் பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதனை தனிப் பாடலாக வெளியிடுமாறு அனிருத்துக்கு ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பாடல் உருவான விதத்தை வீடியோவாக அனிருத் வெளியிட்டுள்ளார்.

#BloodySweet 🍫🔪

Thanks for all your love as always 🙏🏻

👏 to my music team 🏆@siddharthbasrur @kebajer @shashankvijayy @Le_Sajbro @vinhariharan #Srini @LucaPretolesi

🎬 @GndShyam

Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth pic.twitter.com/iTqqfxmqCT

— Anirudh Ravichander (@anirudhofficial) February 9, 2023
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா நடிக்க சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர்.