பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குநர்
Share
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மாத்ருபூமி இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆஃப் லெட்டர்ஸ் என்ற விழாவ நடைபெற்றது. விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, காஷ்மீர் ஃபைல்ஸ் முட்டாள்தனமான படம். அதை தயாரித்தவர் யார் என எங்களுக்கு தெரியும். சர்வதேச விமர்சகர் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதன் இயக்குநர் எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என கேட்கிறார். அவருக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், ஒரு சிறிய படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் அர்பன் நக்சல்ஸ்களுக்கு தூக்கமில்லா இரவுகளைக் கொடுத்திருக்கிறது.
அதில் ஒருவர் அந்தப் படத்தின் பார்வையாளர்களை குரைக்கும் நாய் என குறிப்பிட்டு ஒரு வருடத்துக்கு பிறகும் கஷ்டப்படுகிறார். அந்தகர் (இருள்) ராஜ், பாஸ்கர் எனக்கு எப்படி கிடைக்கும், அவன்/அவள் எப்பொழுதும் உங்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார்.










