LOADING

Type to search

சினிமா

விஷால் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்… புதிய படத்தின் பதிவேற்றம்

Share

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பதிவேற்றம் வெளியாகியுள்ளது. பிரபல நடன இயக்குனராக ராகவா லாரன்ஸ், தற்போது முழு நேர நடிகராக மாறி அடுத்தடுத்த படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து பி வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ‘அதிகாரம்’, ‘ஜிகர்தாண்டா 2’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘அயோக்யா’ படத்தை இயக்கிய வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘அயோக்யா’. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தெலுங்கில் வெற்றி பெற்ற

‘டேம்பர்’ படத்தின் மறுபதிப்பாக இப்படம் உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது