LOADING

Type to search

சினிமா

போர் தொழில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்று

Share

நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘போர் தொழில்’. இப்படம் வருகிற 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘போர் தொழில்’ திரைப்படத்தின் புதிய பதிவேற்றம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.