ஓடிடியில் வெளியாகும் அருள்நிதியின் ’கழுவேத்தி மூர்க்கன்’
Share
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். டி. இமான் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் அருள்நிதியுடன் சந்தோஷ் பிரதாப், முனிஸ்காந்த் ராமதாஸ், யார்கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அடிநாதமாக எடுத்துகொண்டு கழுவேத்தி மூர்க்கன் படத்தை எடுத்துள்ளனர். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு நண்பர்கள். அவர்கள் வாழ்க்கையில் சாதியின் தாக்கமும், அதிகார அரசியலும் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பதை விரிவாக படமாக்கியுள்ளனர். இந்தப் படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது வரும் 23-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













