LOADING

Type to search

இலங்கை அரசியல்

2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த தொலைபேசி ஊடகவியலாளருக்கான விருதை வென்றார் ஜோசப் நயன்

Share

மன்னார் நிருபர்

26.06.2023

இலங்கையில் முதல் முறையாக நடத்தப்பட்ட Sri Lanka’s FIRST Mobile journalism Festival தொலைபேசி ஊடகவியல் விருது விழாவில் தமிழ்,சிங்கள,ஆங்கில கதைகளில் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஜோசப் நயனின் கதை சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது .

USAID Sri Lanka,IREX இணைந்து நடத்திய Srilanka’s FIRST Mobile journalism Festival கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் நிகழ்வாக கொழும்பில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சர்வதேச ஊடகவியலாளர்கள் ஊடாக தொலைபேசி ஊடகவியல் தொடர்பான தெளிவுபடுத்தல் கள் புதிய நுட்பங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடகவியளாலர்கள் ஆவணப்பட தயாரிப்பாளர் களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அதில் ஒரு பகுதியாக நாட்டின் சிறந்த தொலைபேசி ஊடகவியலாளர்களுக்கான கதை தயாரிப்பதற்கான போட்டி இடம் பெற்ற நிலையில் தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கதைகளில் மன்னார் பேசாலை பகுதியில் மீன்பிடி சார்ந்த உப தொழில்களை மேற்கொண்டு வரும் மீனவ பெண்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஜோசப் நயனால் உருவாக்கப்பட்ட கதை முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டது.

குறித்த கதை வெற்றி பெற்றதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொபைல் ஊடகவியலாளருக்கான விருதும் அதே நேரம் மூன்று இலட்சம் பெறுமதியான பரிசும் USAID நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இயக்குனர் மைக்கல் ஹெய்ன்ஸினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.