LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாகிறன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Share

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந்தேதி பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளாக அரசு கொண்டாடி வருகிறது. இதற்கான விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பன்னாட்டு குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்த தொழில் அதிபர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த அனைவரையும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வரவேற்றார். விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றும் எம்.எஸ்.எம்.இ. துறையின் முன்னேற்றத்திற்காக நம்முடைய அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் திண்டிவனத்தில் மருந்து பொருட்கள் பெருங்குழுமம். திருமுடிவாக்கத்தில் துல்லிய உற்பத்திப் பெருங்குழுமம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பெருங்குழுமம் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி, மின்வாகனத் துறை சார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 6 மாவட்டங்களில் 6 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.