LOADING

Type to search

சினிமா

‘எல்ஜிஎம்’ பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தோனி உருக்கம்!

Share

”சென்னை எப்போதுமே எனக்கு ஒரு சிறப்பான நகரம்தான்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய ரசிகர்களால் ‘கூல் கேப்டன்’ என்றும் சென்னை ரசிகர்களால் ‘தல’ என்றும் செல்லமாய் அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர், இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்ததுடன், பல சாதனைகளையும் படைத்தவர். இவருடைய தலைமைப் பண்பு இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
அதிலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கோப்பையை, சென்னை அணிக்காக 5வது முறையாகப் பெற்றுத் தந்தார். பின்னர் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், கடந்த ஜூலை 7ஆம் தேதி தன்னுடைய 42வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்‌ஷி சிங்கும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழில் ’எல்.ஜி.எம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகின்றனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கும் இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.