செங்கல்பட்டில் ஜூலை 20ம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் ராகுல்நாத் தகவல்..
Share
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை 20ம் தேதி தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்து வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஜூலை 20ம் தேதி (வியாழக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை ஆகும். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், கடப்பிதழ் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணி முதல் 2 மணி வரை வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.













