சென்னையில் மீண்டும் இரு அடுக்கு பேருந்து? – ஆய்வில் போக்குவரத்துதுறை
Share
சென்னையில் மீண்டும் இரு அடுக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள நான்கு மிக முக்கியமான பெருநகரங்களில் சென்னையும் ஒன்று. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலம் தொட்டே சென்னை முக்கிய நகரமாக திகழ்ந்துவருகிறது. பல நாட்டைச் சேர்ந்தவர்களும் இங்கு இணைந்து வாழக் கூடிய சூழல் உள்ளது. சென்னையின் மக்கள் தொகை 1.5 கோடியை நெருங்கிய போதிலும் அனைவரையும் அரவணைத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடியை சென்னை எதிர்கொண்டுள்ளது. சென்னையில் கடந்த 1997ஆம் ஆண்டு சென்னையில் இரு அடுக்கு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.
மின்கம்பிகள், மரங்கள் தாழ்வாக இல்லாத சாலைகளில் இயக்கப்பட்ட இந்த பேருந்துகளை 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கினால் கவிழும் அபாயம் ஏற்பட்டது. இந்த சூழலில் சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி கடந்த 2008ஆம் ஆண்டு இந்த வகை பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சென்னையில் இரு அடுக்கு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.













