LOADING

Type to search

சினிமா

கிறிஸ்துமஸ் காத்திருப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி.

Share

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.