LOADING

Type to search

சினிமா

மீண்டும் வெளியாகும் வசந்த் ரவியின் அஸ்வின்ஸ்

Share

தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கினார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் வலையொளி குழுவை மையமாக வைத்து உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது. இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளது. இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.