கமல், விஜய் சேதுபதியை தொடர்ந்து களத்தில் இறங்கும் கார்த்தி
Share
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் முன்னோட்டம் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளாராம். அவர் படத்தின் கதையை விவரிப்பது போன்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கார்த்தியும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













