LOADING

Type to search

சினிமா

‘புராஜெக்ட் கே’: பிரபாஸ் பதாகை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த படக்குழு

Share

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘புராஜெக்ட் கே’ படத்தின் தீபிகா படுகோனேவின் முதல்காட்சி பதாகையை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பிரபாஸின் பதாகையை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.