புதிய கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்த டைனோசர்ஸ் படக்குழு
Share
இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘டைனோசர்ஸ்’ படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய கதாப்பாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் துரையாக மாறா நடித்துள்ளதாக பதாகை வெளியாகியுள்ளது.













