LOADING

Type to search

சினிமா

“தமிழ் படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” – தென்னிந்திய திரைப்பட தலைவர் ஆர்.கே செல்வமணி

Share

தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒழுங்கு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் குறித்தும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்களை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்தும் பேசினார்.

மேலும், தமிழ் திரைப்படத்துறை சீராக ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என கூறினார். அதற்காக சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், தயாரிப்பாளர் சங்கம் முறையாக தெரிவித்துவிட்டு தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என தெரிவித்தார். அனைத்து துறைகளையும் ஒன்றிணைக்க திரைப்பட தொழிலாளர் சங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.