LOADING

Type to search

சினிமா

கமல், விஜய் சேதுபதி வரிசையில் இணைந்த கார்த்தி

Share

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்தப் படத்தில் ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார். செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். அதுவும் டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது. அதற்கான தனித்தனி தோற்றங்களும் அவர்களுக்கு உள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் செப்.15-ல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் கார்த்தி. அவர் படத்தின் கதையை சொல்வது போல பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.