LOADING

Type to search

இந்திய அரசியல்

சபரிமலையில் பக்தர்களுக்காக காத்திருப்போர் அறையை திறக்காதது ஏன்?கேரள உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவு

Share

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜை களுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் 17ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் காத்திருப்போர் அறைகள் கட்டப்பட்டுள்ளன. சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களில் இவை திறந்து இருக்கும் ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த காத்திருப்போர் அறைகளை தேவசம் போர்டு அதிகாரிகள் திறக்காமல் வைத்திருந்தனர். இதனால் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஓய்வு எடுக்க முடியவில்லை. மேலும், அவ்வப்போது கன மழை பெய்து வந்ததால், பக்தர்கள் ஒதுங்கி நிற்க முடியாமல் மழையில் நனைந்தபடி பலமணி நேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருந்தனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில மலையாள பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து ஒரு வழக்குப் பதிவு செய்து செய்துள்ளது. இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்கும்படி சபரிமலை சிறப்பு ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.