LOADING

Type to search

இந்திய அரசியல்

‘ஈரோடு புத்தகத் திருவிழா’ வை நடத்துவதற்கு தேவையான பிரமாண்டமான அரங்குகளை அமைக்கும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Share

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. இன்னும் 19 நாட்களே உள்ளன. 

கடந்த சில நாட்களாக மைதானத்தைச் சுத்தப்படுத்துதல் சமப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அரங்கங்களை எழுப்பும் கட்டுமானப் பணிகள் இரவு – பகல் என தீவிரமாக நடைபெற்று வருகிறன. 

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு ஒரு சிறு நகரத்தையே கட்டமைப்பது போல் பிரம்மாண்டமான வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்தோடு, தினந்தோறும் ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு போதுமான அளவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பஸ், கார், மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோர் தங்குதடையின்றி வந்து செல்வதற்கான வாகன நிறுத்த ஏற்பாடுகள், உணவு, பொதுப் பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான ஏற்பாட்டுப் பணிகள் துறைவாரியாக சிறப்புக் கவனமெடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஈரோடு புத்தகத் திருவிழா கட்டுமானப் பணிகளைக் காண்பதற்கென்றே மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் என தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து பரவசத்தோடு பார்வையிட்டுச் செல்கின்றனர். 

அறிவு வேள்விக்கு அணி திரள்வோம்!