இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் – மீனவர்களுக்கு அதிரடி உத்தரவு
Share
ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் இன்று காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட்டை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
சிங்கப்பூரின் டி.எஸ்.-எஸ்.ஏ.ஆர் என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் காலை தொடங்கிய நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், இன்று பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.










