துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்
Share
சர்வதேச அளவில் பல்கலைக்கழங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் களைகட்டி வருகின்றன.
வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் 119 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கடலூரை சேர்ந்த இளவேனில் வாலறிவன் களம் கண்டார். போட்டியின் போது இவர், இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கினார். தொடர்ந்து அசத்திய இளவேனில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம், நடப்புத் தொடரில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்றது. அத்துடன், கடந்த 2019 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்த இளவேனில், தற்போது தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.










