அலட்சியமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மலையாள நடிகர் மீது வழக்கு
Share
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்வராஜ் வெஞ்ஞாறமூடு. கடந்த ஜூலை 29ம் தேதி நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஒட்டிச் சென்றார். கொச்சி பாலாரி வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் வந்த மலப்புரத்தை சேர்ந்த சரத் என்பவர் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக பாலாரி வட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நடிகர் ஸ்வராஜ் வெஞ்ஞார மூடு அலட்சியமாக அதிவேகத்தில் காரை ஓட்டியது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காருடன் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.













