அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு – விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு
Share
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006-11 காலகட்டத்தில் பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.













