LOADING

Type to search

சினிமா

‘சந்திரா’க்கு பண்ணிட்டேன் ‘முகி’க்கு இனிதான் பண்ணனும் – கீரவாணி பதிவு

Share

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் முதல்காட்சி பதாகை வெளியானது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய பதிவேற்றத்தை கீரவாணி கொடுத்துள்ளார். அதன்படி, ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தின் பின்னணி இசையில் தீவிரமாக ஈடுப்பட்டிருக்கும் கீரவாணி ‘சந்திராவுக்கு பின்னணி இசையமைத்துவிட்டேன். முகிக்கு இன்றைக்கு ஆரம்பிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.