LOADING

Type to search

சினிமா

ஃபகத் பாசில் பிறந்தநாள் பரிசு.. பதாகை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘புஷ்பா 2’ படக்குழு

Share

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘புஷ்பா’. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற பதாகை மற்றும் தலைப்பு முன்னோட்டம் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் பகத் ஃபாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது.