LOADING

Type to search

சினிமா

ஜிவி பிரகாஷ் பட முன்னோட்டத்தை வெளியிடும் தனுஷ்

Share

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘அடியே’ படத்தின் மோஷன் பதாகை மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் ‘அடியே’ படத்தின் முன்னோட்டம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் தனுஷ் இன்று மாலை வெளியிடவுள்ளதாக படக்குழு பதாகை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.