LOADING

Type to search

இந்திய அரசியல்

தி.மு.க பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள், அணிகள் இணைந்து கொண்டாடுவீர் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது-

பாஜ. வின் நடுக்கம் அவர்களது கட்சி நிகழ்ச்சிகளிலும் எதிரொலிக்கிறது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் திமுக எம்.பிக்களின் குரலை கேட்டால் பாஜ. அரசு நடுங்குகிறது. திமுக எந்த மிரட்டலுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கிறார். நாடாளுமன்றத்தில் பா.ஜ. அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் ராகுல்.

மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ. வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல். இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ. படுவேகம் காட்டியது. அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத மத்திய அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி, தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார். பா.ஜ. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களை பார்த்து, எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.