LOADING

Type to search

இந்திய அரசியல்

மின் கட்டண குறைப்பு விரைவில் அமல் – அமைச்சர் தெரிவித்ததாக விசைத்தறியாளர்கள் தகவல்

Share

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது.

ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால் விசைத்தறியாளர்கள் குறைக்கப்பட்ட விசைத்தறி மின் கட்டணத்தை 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும், மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது.

நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் சட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரை தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வேலுசாமி, பல்லடம் பாலாஜி, முத்துகுமார், மங்கலம் கோபால், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.