LOADING

Type to search

இந்திய அரசியல்

காரில் மோதுவது போல வந்ததால் தகராறு; நடுரோட்டில் சரமாரியாக தாக்கிக் கொண்ட பெண்கள்

Share

சண்டிகரில் நடுரோட்டில் பெண்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள செக்டார்-34 பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த சாலையில் ஒரு பெண் ஓட்டிச்சென்ற கார் மற்றொரு காரை மோதுவது போல சென்றுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண் தனது காரை நிறுத்தி விபத்து ஏற்படுத்த முயன்ற காரில் இருந்த பெண்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஒரு பெண்ணை 3 பெண்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். பதிலுக்கு அந்த பெண்ணும் 3 பெண்களுடன் தகராறு செய்வது போன்ற காட்சிகள் உள்ளன. மேலும் அவர்கள் தலைமுடியை பிடித்து இழுப்பது போலவும், ஒருவரை ஒருவர் மாறி, மாறி கை, கால்களால் தாக்கி கொள்வது போலவும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.