LOADING

Type to search

இந்திய அரசியல்

ஓணம் பண்டிகை நாளில் பத்மநாபபுரம் அரண்மனை பூட்டப்பட்டது; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக இந்த அரண்மனை அன்றைய தினத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அப்போது அரண்மனைக்குள் 10 நாட்களுக்கு வண்ண கோலமிட்டு ஊஞ்சல் கட்டிக்கொண்டு சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால், பத்மநாபபுரம் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை, ஊதிய உயர்வு தரவேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர்.

இந்த பிரச்சினை காரணமாக பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று (ஆக 29) ஓணம் பண்டிகைக்காக எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனவே இன்று பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படவே இல்லை. எப்படியும் ஓணம் பண்டிகைக்கு அரண்மனை திறக்கப்பட்டு இருக்கும். அங்கே சென்று பார்க்கலாம் என்று ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். ஆனால், அரண்மனை பூட்டப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மக்கள் அதிக அளவில் வந்திருந்ததால் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நேற்று ஏற்கனவே பத்மநாபபுரம் அரண்மனைக்கு விடுமுறை தினம். ஆனால், இன்று ஓணம் பண்டிகையையொட்டி அரண்மனைக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.