LOADING

Type to search

இந்திய அரசியல்

கணவனுடன் தகராறில் 2 மகன்களை எரித்துக் கொன்று தாய் தற்கொலை

Share

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறை அடுத்த பூவன்கோடு புத்தன் வீட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்(வயது 45). சென்ட்ரிங் காண்ட்ராக்டர். இவருடைய மனைவி தீபா(40).

இந்த தம்பதிக்கு கெவின்(14), டிஷான்(7) என்ற 2 மகன்கள். இதற்கிடையே கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமாம். அதேபோல் 2 மகன்களுக்கும் காலில் சிறிய குறைபாடு உள்ளதால், நடக்கும் போது காலை சற்று சாய்த்தவாறு செல்வார்களாம்.

இதனால் 2 மகன்களுக்கும் மருத்துவம் பார்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஏசுதாஸ், தீபா ஆகியோர் அடிக்கடி ஆலோசனை மேற்கொள்வார்களாம். இந்த பேச்சை எடுத்தாலே 2 பேருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்படுமாம். அந்த வகையில் முதலே ஏசுதாஸ், தீபா இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஏசுதாஸ் உடனே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து ஏசுதாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் 2 மகன்களுடன் இருந்த மனைவி உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு இருந்துள்ளார். ஏசுதாஸ் பலமுறை கதவை தட்டியும் கடும் கோபத்தில் இருந்த தீபா கதவை திறக்கவில்லை. இதனால் நொந்து போன ஏசுதாஸ் வேறு வழியின்றி அதே பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இந்த காட்சிகளை அக்கம் பக்கத்தினரும் பார்த்து உள்ளனர் ஆனால், அவர்களுக்கிடையே இதே போல் அடிக்கடி தகராறு ஏற்படும் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் இன்று (ஆக 29) அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென்று தீபா தங்கி இருந்த வீட்டில் இருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் இந்த கூச்சலை யாரும் கேட்கவில்லை. அப்போது எதார்த்தமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து
இருக்கிறார். அப்போதுதான் விடாமல் காப்பாற்றுங்கள்….. காப்பாற்றுங்கள்…… என்று சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. தீபாவின் வீட்டின் உள்ளே இருந்துதான் சத்தம் வருவதை கண்டுபிடித்தார். இதனால், அதிர்ச்சியடைந்தவர் உடனே பக்கத்தில் உள்ளவர்களின் வீட்டின் கதவுகளை தட்டி அனைவரையும் எழுப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஒன்றாக சேர்ந்து தீபாவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

உடனே வீட்டின் படுக்கை அறை அருகே உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சி கொடூரமாக இருந்தது. தீபாவும் அவருடைய 2 மகன்களும் தீயில் கருகியபடி கதறிக் கொண்டிருந்தது அனைவரையும் உலுக்கியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர் அப்போது தீயில் கருகி கிடந்த மூன்று பேரும் துடித்துக் கொண்டிருந்தனர் இதற்கிடையே ஆம்புலன்ஸ்க்கும் திருவட்டாறு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே தீபாவும் இறந்து போனார். தாயும் தம்பியும் இறந்து போனதை கூட அறியாமல் சிறுவன் கெவின் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தான்.

இதற்கிடையே கெவினுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதா உள்ளதால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து
கெவினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் சென்று தேடிப் பார்த்தபோது அங்கே பாதி கருகிய நிலையில் மண் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்தது. எனவே தீபா மண்ணெண்ணையை முதலில் தன் மீது ஊற்றிக்கொண்டு பின்னர் 2 மகன்கள் மீதும் ஊற்றி இருக்கலாம். இதையடுத்து இரண்டு மகன்களுக்கும் தீ வைத்து விட்டு தீபாவும் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.