மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
Share
அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு, வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அமைச்சருக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அங்கு இருதய ரத்த நாள பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முடிவில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை முடிந்து, பிற்பகல் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பினார்.













