LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் குட்கா கடத்தி வந்த பாஜக கவுன்சிலர் கைது

Share

கேரளாவிலிருந்து செங்கோட்டைக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை (குட்கா) மூடைகளை கடத்திய நகராட்சி பா.ஜ. கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை, சுண்ணாம்பு விளை தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செண்பகராஜன் (வயது 31). இவர் செங்கோட்டை நகராட்சியின் 24வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் இன்று (ஆக 31) காலை திருவனந்தபுரத்திலிருந்து ஒரு லோடு வேனில் 72 புகையிலை மூடைகளை ஏற்றிக் கொண்டு செங்கோட்டைக்கு புறப்பட்டார்.

லோடு வேனை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், கீழத் தெருவைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் அஜய்ரவி (25) என்பவர் ஓட்டினார். கிளீனராக அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் மகன் கிருபாகரன் (35) என்பவர் இருந்தார்.
புளியரை செக்போஸ்டில் லோடு வேன் வந்த போது தென்காசி எஸ்பியின் சிறப்பு படை எஸ்ஐ வேல்முருகன் மற்றும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் 72 மூடைகள் புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 72 மூடை புகையிலை மற்றும் லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 750 ஆகும். கைது செய்யப்பட்ட நகராட்சி பா.ஜ. கவுன்சிலர் செண்பகராஜனுக்கு சொந்தமான வாகனம், விருதுநகரில் இதே போல் புகையிலை கடத்தியதாக சமீபத்தில் சிக்கியது, குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்திய சம்பவத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பாஜக வக்கீல் மணிகண்டனைத் ெ தாடர்ந்து, செங்கோட்டை நகராட்சி பா.ஜ. கவுன்சிலரும் புகையிலை கடத்தலில் சிக்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.