பாஜக ஆட்சி முடிவுக்கு நேரம் தொடங்கிவிட்டது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Share
பாஜக ஆட்சி முடிவுக்கு நேரம் தொடங்கிவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக மும்பையில் நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக ஆட்சி முடிவுக்கு நேரம் தொடங்கிவிட்டது. மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உள்ளது” என்று கூறினார்.













