LOADING

Type to search

இந்திய அரசியல்

மகளிர் உரிமைத் தொகை: வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி சோதனை செய்த தமிழக அரசு

Share

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை(செப்டம்பர் 15) முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இத்திட்டத்தில் வங்கிகள் மூலம் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் அனுப்பப்பட உள்ளது. மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர். திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் பயனாளர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள வங்கி எண்ணுக்கு ஒரு ரூபாய் அனுப்பி நேற்று மாலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளிருந்து கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளர்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பப்பட்டு குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டுவதாலும் , அதிக அளவிலான நிதிப் பரிவர்த்தனை நடைபெற உள்ளதாலும் நிதித்துறை அறிவுறுத்தல்படி முன்கூட்டியே பணம் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளர்களுக்கான நிதி பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வாயிலாக அனுப்பப்பட உள்ளதாக நிதித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.