செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
Share
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மற்றும் ஒழுப்பாக்கம் கிராம பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒழுப்பாக்கம் அண்ணாநகரில் 40 ஆண்டு காலமாகவசித்து வரும் ஆதி திராவிட பட்டியல் சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனு கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமையில் கொட்டும் மழையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் மேற்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உடனே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.













