LOADING

Type to search

சினிமா

‘அயலான்’ பொங்கலுக்கு வெளியீடு – சிவகார்த்திகேயன்

Share

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘அயலான்’ திரைப்படம் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் பதாகை பகிர்ந்து அறிவித்துள்ளார்