LOADING

Type to search

சினிமா

எனக்கு எண்டே இல்ல.. ஜவான் பதிவேற்றம்

Share

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இப்படத்தின் வசூல் ரூ.1,000 கோடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் ரூ.953 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு பதிவேற்றத்தை பகிர்ந்து அறிவித்துள்ளது.