அனிமல் படத்தில் ராஷ்மிகா கதாபாத்திரம் ‘கீதாஞ்சலி’
Share
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அனிமல்’ திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா ‘கீதாஞ்சலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு அறிவித்துள்ளது.













