மதுரையில் அதிகரிக்கும் டிங்கு காய்ச்சல் பாதிப்பு.. 71ஆக அதிகரிப்பு!
Share
மதுரை மாவட்டத்தில் டிங்கு காய்ச்சலின் பாதிப்பு 71 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சமீப காலமாக டிங்கு காய்ச்சல் பரவி வருகின்றது இதனால் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 26 ம் தேதி வரை 107 பேர் டிங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த 107 பேரில் 48 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள். மீதமுள்ள 59 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 35க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளும் சிறுவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலைகள் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு டிங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றது. 59 பேர் என்ற வகையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரே நாளில் திடீரென்று 71 என்ற எண்ணிக்கையில் டிங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.













