LOADING

Type to search

இந்திய அரசியல்

புதிய இந்தியாவிற்கு ஆட்சி முறையில் சீர்திருத்தம் தேவை – பிரதமர் மோடி

Share

கடந்த ஆட்சியில் நாடு முழுவதும் ஒரே மாடல் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, புதிய இந்தியாவிற்கு ஆட்சி முறையில் சீர்திருத்தம் தேவை என்று கூறினார்.
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், துடிப்புமிக்க உள்ளாட்சிகளில் உறுதிமொழி வாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்துறை கலைஞர்கள் காணொலி மூலம் இணைந்தனர். அப்போது மேகாலயாவை சேர்ந்த கலைஞர்கள் பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடினர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, துடிப்புமிக்க மாவட்டங்கள் திட்டம் மூலம், நாடு முழுவதும் 25 கோடி மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாக கூறினார். இதன் நீட்சியாகவே துடிப்புமிக்க உள்ளாட்சி திட்டத்தை பார்ப்பதாக கூறிய அவர், 140 கோடி மக்களின் வாழ்க்கை மேம்படும் போது தான், நாடு வளர்ச்சி அடைந்ததற்கு சமம் என்று கூறினார்.

தாலுகா அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு இந்த திட்டம் உதவிடும் என்றும், சிறந்த நிர்வாகத்தின் மூலம் எந்தவொரு இலக்கையும் எளிதாக எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். நிதி ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே மாற்றங்களை கொண்டுவர முடியாது என்றும் கூடுதல் நிதி இன்றி தாலுகா அளவில் வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் பிரதமர் கூறினார். நாடுமுழுவதும் தாலுக்கா அளவில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். உள்ளாட்சிகளில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வரும் நபர்களை, நாட்டிற்கு அடையாளம் காட்ட மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைத்தையும் அரசு செய்யும் என்ற மனநிலையில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்று கூறிய அவர், சமூகத்தின் ஒற்றுமையே மிகப்பெரிய சக்தி என்றும் தெரிவித்தார்